Monday, June 01, 2015

Life is too short...and thats not fair

நம் வானில்  மின்னும் விளக்குகள் எத்தனை
என் வாழ்வில் இன்னும் இலக்குகள் அத்தனை
ஓடினேன் ஓடினேன் நான்  அத்தனையும் நோக்கி
வென்றேன் பல மீதம் எண்ணிக்கை பாக்கி
 
சந்திக்க முடியுமா அனைதயும் நேருக்கு நேர்
Life is too short...and thats not fair
 
சின்னஞ்சிறிய மனதில் எத்தனையோ கனாக்கள்
நினைவாகும் முயற்சியில் எத்தனையோ வினாக்கள்
வினாக்களின் விடைகலை நான் போகிறேன் தேடி
கணைகளை முடக்கிட கிடைக்குமோ மூடி
 
என் கநாக்களை  நம்பி எத்தனையோ பேர்
Life is too short...and thats not fair
 
நிரம்பி தெலும்பிகிரது இறைசால் பட்டியல்
வறண்டு சிரிக்கிறது என் சேமிப்பு உண்டியல்
ஆசைகளை துரத்துகிறேன் கண்களை மூடி
பட்டியலை முடிக்கவோ தேவை பல கோடி
 
ஒரு ஜன்மம் போதாது, பல ஜன்மம் கேள்
Life is too short...and thats not fair

Sunday, May 10, 2015

சின்னஞ்சிறுக் கண்ணா

சின்னஞ்சிறுக் கண்ணா உன் கனவில் வந்தது யாரு?
நத்தைக் குருவி சிம்ஹம் அல்லக்  கருமை நிறக் காகம்!

ஓட்டப் பந்தயத்தில் முதலில் வந்தது முயலோ?
சிங்கத்தின் வலையை வந்து கடித்தது சின்ன எலியோ!
வேட்டை ஆடும் வேடன் ஏமாந்தே போனான் பாவம்!

போட்டியிட்ட பூனைக்கோ கிடைத்தது எத்தனை ரொட்டி?
மரத்தின் கீழே உட்கார்ந்து வடையை சுட்டது பாட்டி!
நரியும் வந்து ஏமாற வடையைச் சுவைத்தது காகம்!

தொப்பி விற்பவனுக்கோ வந்தது தூக்கம் சொக்கி!
பறந்து வந்த காக்கைக்கோ தாகம் வந்தது விக்கி!
பானையில் கல்லை ரொப்பி தாகம் தீர்த்தது காகம்!

தூக்கம் கலைந்த உடனே அருகில் ஓடி வருவாய்!
கனவில் வந்த கதையைச் சொல்லி மனதில் மகிழ்ச்சி தருவாய்!
உன் உதட்டில் பிறக்கும் புன்னகை அதுவே இனிய ராகம்!

Saturday, June 07, 2014

என் அன்பே - Kavithai By Rama

என் அன்பே

என் அன்பின் கடல் நீயே
என் வாழ்கையின் படகு நீயே
எனக்கு வழிகாட்டும் ஒளியும் நீயே
என் வளர்ச்சிக்கு ஏணி நீயே
என்னுள் இருந்த திறமையை கண்டேடுதவன் நீயே

என் அழுகையை சகிப்பவனும் நீயே
என் சிரிப்பை ரசிப்பவனும் நீயே
என் குறட்டையை தாலாட்டாக ஏற்பவனும் நீயே
என் கோபத்தை பொறுப்பவனும் நீயே

என் சமையலை பரிகசிப்பவனும் நீயே
என் சமையலை ருசித்து மகிழ்பவனும் நீயே
என் வாழ்கையின் இன்பமும் நீயே
என் கவிதைக்கு ஆசானும் நீயே

இது போதும் எனக்கு இது போதுமே !!

அன்புடன்
ரமா ராகவன்

Sunday, May 11, 2014

அன்பு அம்மா - Happy Mothers Day

அன்பு அம்மா
பாசத்தின் இலக்கணம் நீயே அம்மா
அழகு அன்பெனும் ஓவியம் நீயே அம்மா
மனம் உருக்கும் காவியம் நீயே அம்மா
தினம் தொழுதிடும் தெய்வம் நீயே அம்மா

உயிரை பகிர்ந்தது நீயே அம்மா
என்னை உள்ளத்தில் சுமந்தது நீயே அம்மா
உருவம் கொடுத்தது நீயே அம்மா
என்னை உயரத்தில் சேர்த்தது நீயே அம்மா

இவ்வுலகத்தில் என்னை பெற்றெடுக்க
உன் வயற்றில் சுமந்தது நீயே அம்மா
என் முதல் அழுகை கண்டு நீ சிரிக்க
வலியில் செத்துப்பிழைத்தது நீயே அம்மா

தட்டுதடுமாறி நான் நடக்க
என் கை பற்றி கற்பித்தது நீயே அம்மா
பட்ட காயத்தால் நான் துடிக்க
காயம் இட்ட தரையை அடித்தது நீயே அம்மா

இரவில் தூக்கம் கலைந்து நான் அழ
அரவணைத்து சமாதான படுத்தியது நீயே அம்மா
ஜொரத்தில் என் தேகம் நெருப்பாய் கொதிக்க
உன் உடல் வருத்தி என்னை காத்தவள் நீயே அம்மா

மதிப்பெண்கள் குறைந்து நான் குறுகி நிக்க
என்னை அணைத்து ஊக்கம் கொடுத்தவள் நீயே அம்மா
ஏன்டா குறைந்ததென்று அப்பா முறைக்க
அந்த வீச்சிலிருந்து காத்தவள் நீயே அம்மா

பள்ளி முடித்து பசியோடு நான் திரும்பி வர
ஆவி பறக்க சமைத்து கொடுத்தவள் நீயே அம்மா
பிடித்த உணவை நான் திரும்ப திரும்ப கேட்க
உன் பங்கினை எனக்கு தந்தவள் நீயே அம்மா

விடுமுறை நாட்களில் நான் இளைப்பாற
விடுமுறையின்றி உழைதவள் நீயே அம்மா
சுட சுட உணவுகளை நான் உண்டு மகிழ
பரிவுடன் பழையது புசித்தது நீயே அம்மா

அறுசுவை உணவுகளை நீ சமைத்து வைத்து
என் நாக்கின் நீளத்தை பெருக்கியது நீயே அம்மா
வற்றல் குழம்பு உசிலியால் இல்லம் மணக்க
இவ்வுலகில் உனக்கு நிகர் நீயே அம்மா

என் வாழ்வில் வெளிச்சம் நிரம்பி இருக்க
இருளில் மெழுகாய் தேய்ந்தவள் நீயே அம்மா
நம் இல்லம் என்றென்றும் செழித்து இருக்க
வேண்டுதல் விரதமென்று இருந்தவள் நீயே அம்மா

பல ஜன்மம் புண்ணியங்களை சேமித்து வைத்து
உன் சேயாய் பிறந்தவன் நானே அம்மா
இனிவரும் ஜன்மங்களில் உன்னை தாயாய் பெற
வரம் தந்தருள வேண்டும் நீயே அம்மா

                                                                           - ராகவன் பத்ராசலம்

Thursday, February 27, 2014

முறிந்த மொட்டுக்கள்

Thursday, February 20, 2014

என் காதலே - Valentine Day Spl...

காதல் காவியம் படைத்தேன் உனக்கு


கண்ணே அருகில் வாராய்

உயிரெனும் ஓவியம் வடித்தேன் உனக்கு

உயிரே நீயும் பாராய்



மின்னும் விழிகளின் அழகை பார்த்து

விண்மீன் மறைந்தது ஓடி

ஒளிரும் உன்முகம் இரவினில் பார்த்து

நிலவும் தோற்றது போடி



கன்னம் தோன்றிய சிவப்பினை பார்த்து

வண்டும் விரைந்தது நாடி

வண்ணம் பூசிய இதழ்களை பார்த்து

முகையும் விழுந்தது வாடி



சற்றேன்ன வளையும் புருவங்கள் சேர்த்து

பல நெத்திலி பிடித்திடலமோ

முதென்ன மின்னும் பல்தனை கோர்த்து

பொன் சங்கிலி பின்னிடலாமோ



நெற்றியில் பொலிவுடன் வட்டமாய் குங்குமம்

வண்ணத்து கோலங்கள் தானே

உச்சியில் வகிடை நிரப்பிய குங்குமம்

வைத்தது யாரது நானே



மொத்தம் அழகினை குத்தகை எடுத்தவள்

உன் உள்ளத்தின் நிறமோ வெள்ளை

இத்தகை அழகை பெற்றவர் யாரோ

உன்னிகர் உலகினில் இல்லை



இத்தனை அழகை முற்றிலும் பார்த்து

பிதென்ன திரிந்தேன் நானே

பட்டதும் உன்னை தழுவிய காற்று

இதயத்தை தொலைத்தேன் நானே



கோடையில் வாடிய சருகாய் இருந்தேன்

துளிர் காதலை புகுத்தவள் நீயே

முடியா காவியம் போல நான் இருந்தேன்

என்னை முற்றிலும் முடித்தவள் நீயே

Friday, February 14, 2014

தமிழ் கவிதை

செம்மொழி எங்கள் தமிழ் மொழியாம்
உரைத்திட எங்கள் உயிர் மொழியாம்
பண்போடு பேசிடும் நம் மொழியாம்
உலக திராவிடர் உரை மொழியாம்

கம்பன் பாடிய கனிமொழியாம்
பாரதி கண்ட புதுமொழியாம்
வள்ளுவன் தந்த குறள் மொழியாம்
அடிகள் அளித்த அருள்மொழியாம்


பாரதிதாசனின் புரட்சி மொழியாம்
கவியரசின் கற்பனை வளர்த்த மொழியாம்
வாலி எழுத்தினில் எழில் மொழியாம்
வைரமுத்துவின் வைர மொழியாம்


திருக்குறள் எங்கள் தனி மொழியாம்
சிலப்பதிகாரம் சிலிர்த்த மொழியாம்
தேவாரம் தந்த தென் மொழியாம்
திருப்பாவை தினம் துதித்த மொழியாம்


செம்மொழி எங்கள் தமிழ் மொழியாம்
உலகத் தமிழரின் தாய்மொழியாம்
மனதை மயக்கும் மது மொழியாம்
எங்கள் குருதியில் ஊறிய மொழியாம்