Kaadhal - Lyrics by Me
சிந்தும் மழைத்துளி போலே
சந்தம் பொழியுது உள்ளே
எதிலும் அழகைக் கண்டேன் மண்மேலே
காணும் கனவுகள் மெல்ல
வானம் தழுவுது இங்கே
நெஞ்சம் நிறைகிறதின்பம் தன்னாலே
பூக்கள் பொழிந்திடும் என்னுயிர் வாசம் வீசும் மரங்களும் செம்மொழி பேசும்
கொஞ்சும் பறவைகள் கண்ஜாடை பேசும்
மலைதனில் நதி வந்து ஜதிகளைப் போட, கரைதனில் நுரைவந்து அலைகளைத் தேட
துளிர்விடும் நினைவுகள் தொடுவானம் சேரும்
சரணம் 1
விண்ணோடு மேகம்
வந்தாடும் நேரம்
மண்ணோடுவாசம் என்மீதுவீசும்
கண்ணோடு காணும் கோலங்கள்நூறும்
விண்ணோடு சேர்ந்து வண்ணங்கள்தூவும்
அன்றாடம் மாலை
நின்றாடும் சோலை
எனைப்பார்த்து சிரிக்கும் புதுக்காலை
சரணம் 2
பெண்ணோடு நேசம்
மின்சாரப் பேச்சும்
நில்லாமல் எந்தன்
நெஞ்சோடு வீசும்
உண்டான காதல்
உற்சாகத் தேடல்
உள்மூச்சில் வீசும் உயிர்ப் பாடல்
பூக்கள் பொழிந்திடும் என்னுயிர் வாசம் வீசும் மரங்களும் செம்மொழி பேசும்
கொஞ்சும் பறவைகள் கண்ஜாடை பேசும்
மலைதனில் நதி வந்து ஜதிகளைப் போட, கரைதனில் நுரைவந்து அலைகளைத் தேட
துளிர்விடும் நினைவுகள் தொடுவானம் சேரும்
0 Comments:
Post a Comment
<< Home