கேளாய் மகளே
மானாட மயிலாட சொல்வேனடி
மணம்போல விளையாட சொல்வேனடி
தேனாக தமிழாக சொல்வேனடி
தானாக துயிலாட சொல்வேனடி
துணிவோடு மணம்பேச சொல்வேன் அடி
கனிவோடு கரம் நீட்ட சொல்வேனடி
அமுதாக உறைபேச சொல்வேனடி
விழுதாக விழிதாங்க சொல்வேனடி
குறையின்றி புகழ்வாழ சொல்வேனடி
கரையின்றி குணம்நாட சொல்வேனடி
பகையின்றி பினைவாழ சொல்வேனடி
பிறை இன்றி புவி ஆள சொல்வேனடி
பல நாடு புகுந்தாலும் சொல்வேனடி
தாய் மண்ணை துதிபாடு சொல்வேனடி
பல மொழிகள் பயின்றாலும் சொல்வேனடி
தமிழ் மொழியை கொண்டாடு சொல்வேனடி