சின்னஞ்சிறுக் கண்ணா
சின்னஞ்சிறுக் கண்ணா உன் கனவில் வந்தது யாரு?
நத்தைக் குருவி சிம்ஹம் அல்லக் கருமை நிறக் காகம்!
நத்தைக் குருவி சிம்ஹம் அல்லக் கருமை நிறக் காகம்!
ஓட்டப் பந்தயத்தில் முதலில் வந்தது முயலோ?
சிங்கத்தின் வலையை வந்து கடித்தது சின்ன எலியோ!
வேட்டை ஆடும் வேடன் ஏமாந்தே போனான் பாவம்!
போட்டியிட்ட பூனைக்கோ கிடைத்தது எத்தனை ரொட்டி?
மரத்தின் கீழே உட்கார்ந்து வடையை சுட்டது பாட்டி!
நரியும் வந்து ஏமாற வடையைச் சுவைத்தது காகம்!
தொப்பி விற்பவனுக்கோ வந்தது தூக்கம் சொக்கி!
பறந்து வந்த காக்கைக்கோ தாகம் வந்தது விக்கி!
பானையில் கல்லை ரொப்பி தாகம் தீர்த்தது காகம்!
தூக்கம் கலைந்த உடனே அருகில் ஓடி வருவாய்!
கனவில் வந்த கதையைச் சொல்லி மனதில் மகிழ்ச்சி தருவாய்!
உன் உதட்டில் பிறக்கும் புன்னகை அதுவே இனிய ராகம்!