Friday, February 14, 2014

தமிழ் கவிதை

செம்மொழி எங்கள் தமிழ் மொழியாம்
உரைத்திட எங்கள் உயிர் மொழியாம்
பண்போடு பேசிடும் நம் மொழியாம்
உலக திராவிடர் உரை மொழியாம்

கம்பன் பாடிய கனிமொழியாம்
பாரதி கண்ட புதுமொழியாம்
வள்ளுவன் தந்த குறள் மொழியாம்
அடிகள் அளித்த அருள்மொழியாம்


பாரதிதாசனின் புரட்சி மொழியாம்
கவியரசின் கற்பனை வளர்த்த மொழியாம்
வாலி எழுத்தினில் எழில் மொழியாம்
வைரமுத்துவின் வைர மொழியாம்


திருக்குறள் எங்கள் தனி மொழியாம்
சிலப்பதிகாரம் சிலிர்த்த மொழியாம்
தேவாரம் தந்த தென் மொழியாம்
திருப்பாவை தினம் துதித்த மொழியாம்


செம்மொழி எங்கள் தமிழ் மொழியாம்
உலகத் தமிழரின் தாய்மொழியாம்
மனதை மயக்கும் மது மொழியாம்
எங்கள் குருதியில் ஊறிய மொழியாம்